சூரக்குண்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

மேலூர், ஆக. 13: மேலூர் அருகே நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 552 மனுக்கள் பெறப்பட்டது. மேலூர் அருகே சூரக்குண்டு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் சூரக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொது மக்கள் 552 பேர் மனு கொடுத்தனர். முகாமில் துணை ஆட்சியர் (ஆய்வு குழு மாவட்ட அலுவலர்) பஞ்சாபிகேசன், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரசாமி, சரஸ்வதி, மேலூர் தாசில்தார் செந்தாமரை, சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் லயனல் ராஜ்குமார்.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகாமாட்சி, முத்து குமார், செல்லப்பாண்டியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், அன்புச்செல்வன், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: