தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை, ஆக. 13: மதுரை கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறைசார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் ஆர்வலருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், www.tamilvalarchithurai.tn.gov.in ஆகியவற்றில் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.

தன் விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள், பெற்ற விருதுகள், தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பு, தமிழ் பணிக்கான சான்றுகள், ஆகியவற்றை இணைத்து மதுரை அரசு சட்டக்கல்லூரி அருகில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கிவரும் மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் செப்.1க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: