அம்ரித் பாரத் திட்டத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்க பணிகள்

மயிலாடுதுறை, ஆக.13: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் நேரில் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே நடைமேடையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, டைல்ஸ்கள் பதிக்கப்படுகின்றன.

மேலும் முகப்பு பகுதி பிரம்மாண்டமான வளைவுகளுடன் புதுப்பிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. இந்த பணிகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது தலைமை திட்ட மேலாளர் சந்திரசேகர், திருச்சி கோட்டை முதல் நிலை பொறியாளர் ரவிக்குமார் உடன் இருந்தனர்.

 

Related Stories: