ஐம்பெரும் சிவாலயமான ஏகாம்பரேஸ்வரர் ேகாயிலில் ஆடி மாத விளக்கு பூஜை

வலங்கைமான், ஆக.12: வலங்கைமானில் ஐம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான ஏகாம்பரேஸ்வரர் ேகாயிலில் நடைபெற்ற விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் கிராமத்தில் ஐம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் ேகாயிலில் ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மதியம் அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது. பின்னர்மாலை 6 மணிக்கு சுமங்கலிகள் கலந்து கொள்ளும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Related Stories: