ஸ்தபதிக்கு ஆதீனம் விருது

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்தவர் சூரியமூர்த்தி (32). ஸ்தபதி, இவர், சுவாமி மலையில் ஐம்பொன் சிற்ப பணிகளை செய்து வருகிறார். இவரது சிற்பக்கலை திறமையை பாராட்டி கூனம்பாடி கல்யாணபுரி ஆதீனம் 57-வது குருமகா சன்னிதானம் மத் ராஜ சரவணா மாணிக்கவாசக சுவாமிகள், உலோகாலங்க்ருத சிலாக்ரியா ரத்னா விருதினை வழங்கி கவுரவித்தார். விருதுபெற்ற ஸ்தபதி சூரியமூர்த்தியை, சிற்பக்கலை ஸ்தபதிகள் பாராட்டினர்.

Related Stories: