புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முத்து பல்லக்கு பெருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர், ஆக. 12: தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில்  மாரியம்மன் கோவில் உள்ளது. இது அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்றகோயிலாகும். இந்தக்கோவிலில் உள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. அதனால் அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் தைலக்காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது, மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெற்று வருகிறது.இதையடுத்து நேற்று இரவு அம்மனுக்கு முத்துமணிச் சிவிகையில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட பல்லக்கில் அம்மன் காட்சியளித்தார். நிகழ்ச்சியில் நாதஸ்வர இசைக் கச்சேரிகள் இசைக்க, ஆண்கள், பெண்கள், தப்பாட்டம் மற்றும் வானவேடிக்கைகளுடன் இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய வீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: