×

இளம்பெண்கள் பாசறையில் சேர்ந்த பெண்களுக்கு உறுப்பினர் அட்டை

சேலம், ஆக.12: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் புதியதாக சேர்க்கப்பட்டோருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடந்தது. முதற்கட்டமாக 100 பேருக்கு உறுப்பினர் அட்டையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், அமைப்பு செயலாளர் செம்மலை, புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏக்கள் ராஜமுத்து, ஜெயசங்கரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நீட் தேர்வில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி தொகுதியை சேர்ந்த அரசுபள்ளிகளில் படித்து தேர்வு பெற்ற திவ்யதர்சினி, அக்சயா, சவிதா, மஞ்சுளா, கோகிலா, சுதர்சன், ஹரிப்பிரியன், பிரசன்னகுமார் ஆகியோர் நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : Salem ,Salem Suburban District ,AIADMK Youth and Girls Camp ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்...