முத்துப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

முத்துப்பேட்டை,ஆக.11: முத்துப்பேட்டையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் சீருடைகளை வழங்கினார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவ அய்யப்பன், முதல் நிலை அலுவலர் மோகன், சுகாதார மேற்பார்வையாளர் கார்த்தி மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

 

Related Stories: