பரனூர் சுங்கச்சாவடி அருகே ஆம்னி பஸ் மீது தனியார் பஸ் மோதல்; 20 பெண்கள் காயம்

செங்கல்பட்டு: கோவையில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு புறப்பட்டது. இந்த பஸ், செங்கல்பட்டு அடுத்த பரனூர் அருகே இன்று காலையில் வந்தபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது தனியார் நிறுவன பஸ், பணியாளர்களை ஏற்றி கொண்டு கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தனர். ஆம்னி பஸ் டிரைவர் பிரேக் போட்டதால், அந்த பஸ் மீது தனியார் நிறுவன பஸ் மோதியது. இதில் தனியார் நிறுவன பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இரு பஸ்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிமீ தூரத்துக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில், தனியார் ஆம்னி பஸ் டிரைவரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக சக பயணிகள் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: