அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ஆக.8. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்களை இணை பேராசிரியர்களாக நியமித்திட வேண்டும்.

மூத்த ஆசிரியர்களை கொண்டு கல்லூரி கல்வி இயக்குனர் பணியிடத்தை நிரப்பிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முன்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை பொறுப்பாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் நடராஜன். முருகானந்தம், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: