ஊட்டி,டிச.7: ஊட்டி எட்டின்ஸ் சாலையில் ஏடிசி., பகுதியில் சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் முக்கிய சாலைகளுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை பராமரிப்பிற்காக பணி காரணமாக அண்மையில் இரும்பு மூடிகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக கான்கிரீட் மூடிகள் அமைக்கப்பட்டன.