- பிறகு நான்
- சுக்குவடன்பட்டி
- ஊஞ்சம்பட்டி
- தேனி மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.
- இனியவன்
- மின்சார வாரியம்
- தேனி மாவட்ட காங்கிரஸ்
தேனி, ஆக.6: தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்குவாடன்பட்டியில் விவசாய நிலத்தில் மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் இருந்தது. இதனை மாற்றி வேறு மின்கம்பம் அமைக்க இப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் தேனி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி அணி தலைவர் இனியவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மின்வாரியத்துறை அலுவலகத்தை அணுகி பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்று மின்வாரியத்துறை உடனடியாக மின்கம்பத்தை மாற்றி நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காங்கிரசார் தமிழ்நாடு அரசு மின்வாரியத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
