- லீ
- ஐக்கிய மாநிலங்கள்
- பெண்கள் ஸ்பீட் செஸ் வைசாலி
- நியூயார்க்
- வைசாலி
- ஆலிஸ் லீ
- அமெரிக்கா
- திவ்யா தேஷ்முக்
- உலகக்கோப்பை சதுரங்கம்
- சீன
- மாஸ்டர் லீ
நியுயார்க்: ஆன்லைன் மூலம் நடைபெறும் மகளிர் ஸ்பீட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலியும், அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆலீஸ் லீயும் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆலீஸ் லீ, 8-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
வரும் 11ம் தேதி நடக்கும் மற்றொரு போட்டியில், சமீபத்தில் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், சீன கிராண்ட் மாஸ்டர் லெய் டிங்ஜீ உடன் முதல் சுற்றுப் போட்டியில் ஆட உள்ளார். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை, ரூ.65 லட்சம். போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு, ரூ. 6 லட்சம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
