×

திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருச்செந்தூர், ஆக. 5: நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ சதீஷை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தராமச்சந்திரன் பாராட்டி பரிசு வழங்கினார். இப்பள்ளியில் பயின்ற மாணவர் செல்வசதீஷ் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் மற்றும் மாநில அளவிலான முதல் 10 தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து சாதனை மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சில்வான்ஸ் சுந்தர்சிங் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தராமச்சந்திரன் மாணவரை பாராட்டி பரிசு மற்றும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தாமஸ், பாரதிராஜா, ராஜ்குமார், பாதகரைமுத்து, வேல்குமார், கார்த்திகேயன், சுப்பிரமணியன், ஜெயபால், சகாயம், சக்திவேல், சுரேந்தர், ஆனி சுபா பெல்சிட், மெரில் ஜெமீமா, ஜெயச்சந்திரா, சொர்ணலதா, செல்வி, கோமதி, ராதா, ஆனந்தி, கலைமகள், இமாகுலேட், விஜிலா, ஜெயலெட்சுமி, சுமதி, ஜெசிந்தா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் செல்வசதீஷ் ஏற்புரையாற்றினார்.

Tags : Tiruchendur Government School ,Tiruchendur ,Thiruchendur ,Arulmigu ,Senthilandavar Government Boys Higher Secondary School ,Selva Satheesh ,Ananda Ramachandran ,Parents' Teachers Association ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்...