பாலக்காட்டில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்

 

பாலக்காடு, ஆக. 5: பாலக்காடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலக்காடு மாவட்டம் கொடும்பு அருகே கல்லிங்கல் பகுதியில் தண்ணீரில் மாசுப்படியாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கலைக்கூடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.
பாலக்காடு மாவட்ட கணேஷ உற்சவகமிட்டி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமும் பாலக்காடு நகராட்சி பகுதிகளிலும், மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான ஆலத்தூர், மன்னார்க்காடு, சித்தூர், தத்தமங்கலம், கொடுவாயூர், கொழிஞ்சாம்பாறை, நல்லேப்பிள்ளி, வண்டித்தாவளம், கொல்லங்கோடு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து விஷேச பூஜைகள் முடித்து வாத்தியகோஷத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளது.

Related Stories: