7 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோக பணிகள்

 

திருப்பூர்,செப்.4: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மாநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ளது.மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் குடிநீர் தேவை உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.தினமும் மாநகர் பகுதிகளில் ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அனைத்து பகுதிகளில் குடிநீர் பிரதான தேவையாக இருப்பதால் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வார்டு எண் 19, 20, 21, 30, 31 மற்றும் 44, 51 ஆகிய வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் ரூ.41 கோடி மதிப்பில் நடைபெறுகிறது. இதன் தொடக்க கங்காநகரில் நடந்தது. இதற்கிடையே அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகளை நேற்று மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

The post 7 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோக பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: