67 பத்திரிகையாளர்கள் 2022ல் படுகொலை: சர்வதேச கூட்டமைப்பு தகவல்

பிரஸ்ஸல்ஸ்: உலகம் முழுவதும் இந்தாண்டு மட்டும் இதுவரை 67 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செயல்படும் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘உலகம் முழுவதும் இந்தாண்டு மட்டும் இதுவரை 67 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 47 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்தாண்டு பலியான பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போர், ஹைத்தியில் நிலவும் போராட்டம் மற்றும் மெக்சிகோவில் செயல்படும் தீவிரவாத குழுக்களால் நடத்தப்பட்ட வன்முறை ஆகியவற்றால் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post 67 பத்திரிகையாளர்கள் 2022ல் படுகொலை: சர்வதேச கூட்டமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: