கேப்டன் ரோகித் ஷர்மா 35, விராத் கோஹ்லி 20, வாஷிங்டன் சுந்தர் 30, பராக் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இலங்கை பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 5.1 ஓவரில் 27 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தார். மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வாண்டர்சே தலா 2, அசிதா பெர்னாண்டோ 1 விக்கெட் வீழ்த்தினர். 110 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. அவிஷ்கா பெர்னாண்டோ ஆட்ட நாயகன் விருதும், துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதும் பெற்றனர். சூரியகுமார் யாதவ் தலைமையில் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்த இந்தியா, ரோகித் தலைமையில் ஒருநாள் தொடரை இழந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post 3வது போட்டியில் இந்தியா படுதோல்வி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை appeared first on Dinakaran.