சென்னை மாமல்லபுரத்தில் 2-வது நாளாக களைகட்டிய சர்வதேச காற்றாடி விடும் திருவிழா!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. சுறா மீன், பாண்டா கரடி, கொரில்லா குரங்கு உள்பட பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட காற்றாடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 3-வது முறையாக சுற்றுலாத்துறை மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கடற்கரை பகுதியில் சர்வதேச காற்றாடி விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த காற்றாடி விடும் திருவிழா வருகிற 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. தினமும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி விடும் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு களைகட்டியுள்ளது. சுறா மீன், பாண்டா கரடி, கொரில்லா குரங்கு, புலி உள்பட பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பட்டங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

வானில் சிறகடித்து பறந்த பட்டங்களை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 200-க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து பட்டங்களை பறக்க விடுகின்றனர்.

 

The post சென்னை மாமல்லபுரத்தில் 2-வது நாளாக களைகட்டிய சர்வதேச காற்றாடி விடும் திருவிழா! appeared first on Dinakaran.

Related Stories: