காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆக.11-ம் தேதி டெல்லியில் கூடுகிறது

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆக.11-ம் தேதி டெல்லியில் கூடுகிறது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தரவேண்டிய காவிரி நீரை திறந்துவிடாததால் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. ஒன்றிய நீர்வள அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட ஒன்றிய அமைச்சர் கஜேந்திர செகாவத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

 

The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆக.11-ம் தேதி டெல்லியில் கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: