10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது

 

செய்யாறு, செப்.2: செய்யாறில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் நேற்று கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகள், அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கொடநகர் நல்ல தண்ணீர் குளத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(23), சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்தும் கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு செய்து வந்தாராம். அதேபோல், கடந்த 30ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கொடநகர் ஏரிக்கரைக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டராம். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கிருந்து தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.இதுகுறித்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விஜயகுமாரை கைது செய்தார். பின்னர், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் நேற்று அடைத்தார்.

(தி.மலை) 3 எஸ்ஐக்கள் உட்பட 9 பேர் பணியிட மாற்றம்எஸ்பி உத்தரவுமாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த திருவண்ணாமலை, செப்.2: திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த 3 எஸ்ஐக்கள் உட்பட 9 பேரை கட்டுப்பட்டு அறைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவில் நிர்வாகம் மாற்றங்களை செய்ய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த 3 சிறப்பு எஸ்ஐக்கள் உட்பட 9 பேரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி எஸ்பி பிரபாகர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சிறப்பு எஸ்ஐக்கள் எம்.மனோகரன், ஒய்.ஜார்ஜ், ஏ.பழனி, தலைமைக் காவலர்கள் சி.முருகன், எஸ்.கவிதா, முதல் நிலைக் காவலர்கள் தமிழ்ச்செல்வன், வனிதா முருகேஷ், ஜெயந்தி ஆகியோர் நேற்று மாவட்ட குற்றப்பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் பணியில் சேர்ந்தனர்.

 

The post 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: