போளூர்,ெசப்.18: போளூர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தேர்வாகி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியில் 9ம் வகுப்பு மாணவி பி.எஸ்.நிஷா முதலிடமும், இறகுப் பந்து போட்டியில் 9ம் வகுப்பு மாணவி எஸ்.பூர்விகா முதலிடமும், சிலம்பம் போட்டியில் 12ம் வகுப்பு மாணவி வி.ஷாலினி முதலிடமும் வெற்றி பெற்றனர். இந்த மூன்று மாணவிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தேர்வான மாணவிகளை பள்ளி தலைமையாசிரியை செ.சுதா, உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், சுமதி உட்பட பலர் பாரட்டி பரிசு வழங்கினர்.
The post மாணவிகள் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் முதலிடம் மாவட்ட அளவில் போளூர் பெண்கள் பள்ளி appeared first on Dinakaran.