திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் 19ம் தேதி தேர்த்திருவிழா

திருப்பூர்,பிப்.14: திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரோடு மிகவும் பழமையான திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலின் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி தேர் திருவீதி உலா நடக்கிறது.

 திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரோடு திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாதசுவாமி கோயிலின் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இன்று(15ம் தேதி) சூரிய சந்திர மண்டலக்காட்சிகள், 15 ம் தேதி பூதவாகனம் சிம்ம வாகனக்காட்சிகள், 16 ம் தேதி புஷ்ப விமானக்காட்சி, 17 ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனக்காட்சிகள், 18 ம் தேதி திருக்கல்யாணம்-யானை வாகன, அன்னவாகன காட்சிகள் நடக்கிறது. 19ம் தேதி அதிகாலை மகம் நட்சத்திரத்தில் திருமுருகநாதர் திருத்தேருக்கு எழுந்தருளல் மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

தேரோட்டத்தில் கோவை கவுரமடாலயம்  குமரகுருபர சுவாசிகள்,  பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், சபாநாயகர் தனபால், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியார் செய்துவருகின்றனர்.

Related Stories: