வாழப்பாடியில் வீடு, வீடாக அதிமுகவினர் டோக்கன் : திமுகவினர் எதிர்ப்பால் ஓட்டம்

வாழப்பாடி, ஜன.9: வாழப்பாடி அருகே ஆயிரம் ரூபாயுடன் பரிசு பொருட்களுக்காக, வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகித்த அதிமுகவினரை, திமுகவினர் விரட்டியதால் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், இன்று முதல் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன், 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அதிமுகவினர் வீடு, வீடாக சென்று கூட்டுறவு சங்கத்தின் சீல் வைக்கப்பட்ட டோக்கன்களை மக்களுக்கு வழங்கினர். துக்கியாம்பாளையம் கிராமத்தில் டோக்கன் வழங்கியபோது திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் அதிமுகவினரை விரட்டினர். இதனால் 150 வீடுகளுக்கு கொடுத்த நிலையில் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உத்தரவின்பேரில் மேலும் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அல்லாத சமயத்தில், இரவு நேரத்தில் அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: