57 ஊராட்சி செயலர்கள் பங்கேற்பு புயல் எச்சரிக்கை நாளை நடைபெற இருந்த மறியல் போராட்டம் ஒத்தி வைப்பு காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன பொது செயலர் அறிவிப்பு

காரைக்கால், நவ.14: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நாளை(15ம் தேதி) நடத்த இருந்த மறியல் போராட்டம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என, அரசு ஊழியர் சம்மேளன பொது செயலர் ஷேக் அலாவுதீன் அறிவித்துள்ளார்.இது குறித்து, காரைக்கால் மாவட்ட அரசு ஊழியர் சம்மேளன பொது செயலர் ஷேக் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பஜன்கோவா, புதுச்சேரி சாலை போக்குவாத்துக்கழகம், மின்திறல் குழுமம், அங்கன்வாடி, பாப்ஸ்கோ, பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தவேண்டும்.  உள்ளாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு மாதம் மாதம் ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே அரசின் கவனத்தை எங்கள் மீது திருப்ப, நவம்பர் 15ம்  தேதி, காரைக்காலில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம்.

அன்றய தினம் கஜா புயல் வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோன்ற சமயத்தில், பொதுமக்களுக்கு ஊழியர்கள் சேவையாற்றும் கடமை இருப்பதால், அன்றைய தினம் அறிவித்திருந்த மறியல் போராட்டத்தை தேதி குறிப்பிடடமல் தள்ளிவைக்கப்படுகிறது. மறியல் போராட்டம் தேதி விரைவில் அறிவிப்பு செய்யப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேதாரண்யம், நவ.14: வேதாரண்யம் கொள்ளித்தீவுபகுதியைச் சேர்ந்தவர்  முருகையன்(60). இவர் நேற்று பயிர் காப்பீடு செய்வதற்காக கிராம நிர்வாகஅலுவலரிடம் சான்று பெறுவதற்காக தோப்புத்துறைக்கு வேதாரண்யத்திலிருந்துஅரசுபேருந்தில் சென்றுள்ளார். பேருந்து தோப்புத்துறை ரயில்வே கேட் வேகத்தடை அருகே சென்ற போது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.பின்பு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபலனின்றி  இறந்து விட்டார். இது குறித்து புகாரின் பேரில் வேதாரண்யம்  எஸ்எஸ்ஐ அகோரம் விசாரணை  நடத்தி வருகிறார்.

Related Stories: