கிராம மக்களுக்கு ஆங்கில கல்வி கிடைக்க 40 பள்ளிகளை நிறுவியவர் கெங்குசாமி நாயுடு

உடுமலை, அக்.5: கல்வியாளரும், தொழிலதிபரும், கம்மநாயுடு மகாஜன சங்க முன்னாள் தலைவருமான கெங்குசாமி நாயுடுவின் 87வது பிறந்த நாள் விழா மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா உடுமலை ஜிவிஜி., கலையரங்கில் நேற்று நடந்தது.  உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி அறக்கட்டளை தலைவரும், கம்ம நாயுடு சங்க மாநில தலைவருமான ரவீந்திரன் கெங்குசாமி வரவேற்றார். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை வகித்து, கெங்குசாமி நாயுடு படத்தை திறந்து வைத்தார். கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் நூலை வெளியிட, சென்னை ஆர்எம்கேடி, ஆர்எம்டி., கல்லூரிகளின் நிறுவனர் முனிரத்தினம் பெற்றுக்கொண்டார். விழாவில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் பேசுகையில்,`ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமின்றி, அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் கிராமத்தில் இருக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் ஆங்கில கல்வி கிடைக்க 40 பள்ளிகளை நிறுவியர் கெங்குசாமிநாயுடு’ என்றார்.பொள்ளாச்சி எம்பி., மகாலிங்கம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகவேலு, கோவை முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், அண்ணாநகர் எம்எல்ஏ., எம்.கே.மோகன்,  வித்யாசாகர் கல்லூரி செயலர் வித்யாசாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: