பூம்புகார் பகுதியில் 18 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பூம்புகார்,செப்.18: பூம்புகார் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 18 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. நாகை மாவட்டம்  பூம்புகார் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 3 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் பூம்புகார் மேலையூர் கொத்தத்தெரு சர்வசித்தி விநயாகர் செல்வராஜ் ஸ்தபதி தலைமையிலும், காராஜர் நகர் சுந்தரகணபதி முருகன் மற்றும் பாலமுருகன் தலைமையிலும் மணி கிராமம் மாணிக்க விநாயகர், திருநகரி கீழசாலை செங்கழனி விநாயகர், திருநகரி செல்வ விநாயகர், மேலையூர் லெட்சுமி விநாயகர் நாகராஜன் தலைமையிலும் பழையகரம் செல்வ விநாயகர், குரங்குபுத்தூர் கிருஷ்ண விநாயகர் பல்லவனம் கண் கொடுத்த விநாயகர், சாயாவனம் மங்கள விநாயகர் வாணகிரி ராஜ விநாயகர், அடைக்கலபுரம் விநயாகர், மந்தகரை விநாயகர், சட்ரஸ் ராஜ விநாயகர், மேலப்பெரும்பள்ளம் விநாயகர், கீழப்பெரும்பள்ளம் சுந்தர விநாயகர் மற்றும் பல பகுதியில் உள்ள விநாயகருக்கு சிறப்பு படையலிட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பூம்புகார் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு விழா குழுவினர், கிராமமக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கடலில் கரைத்தனர்.

Related Stories: