பாரதி மகளிர் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் துவக்கம்

சின்னசேலம், செப். 18:

கள்ளக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்றம் துவக்க விழா நடந்தது. பாரதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் லட்சுமிகந்தசாமி தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ரொட்டேரியன் கந்தசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திலகவதி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் சிவபெருமான் கலந்துகொண்டு பாரதியை போற்றுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பின்னர் பாரதியின் வழியில் மகளிர்கள் புரட்சி பெண்ணாக வீறு கொண்டு எழ வேண்டும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்று உரையாற்றினார். பாரதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் லட்சுமிகந்தசாமி பாரதி வழியில் புதுமைகளை படைக்கும் புதுமை பெண்களாக வளர வேண்டும் என்று மாணவிகளை வாழ்த்தி பேசினார்.  சிறப்பு அழைப்பாளர்களாக ஆசுகவி ஆரவமுதன், ஆக்ஸாலிஸ் சர்வதேச பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பாரத்குமார், சர்வதேச பள்ளி செயலாளர் சாந்தி பாரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். பின்னர் மாணவிகளின் பண்பாட்டு கலைநிகழ்ச்சி நடந்தது. தமிழ்த்துறை பேராசிரியர் இசையமுது நன்றி கூறினார்.

Related Stories: