தங்கம் விலையில் அதிரடி; காலையில் குறைந்து மாலையில் அதிகரிப்பு: நகை வாங்குவோர் குழப்பம்

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் அதிரடியாக குறைந்து, மாலையில் சற்று அதிகரித்தது நகை வாங்குவோரிடையே ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்தியது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறது. நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ஒரு கிராம் ரூ.4,860க்கும், சவரனுக்கு ரூ.264 குறைந்து ஒரு சவரன் ரூ.3,880க்கு விற்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலை அதிகரித்தது.அதே நேரத்தில் நேற்று முன்தினத்தை விட கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.4,885க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.39080க்கு விற்கப்பட்டது.  காலையில் அதிரடியாக குறைந்து, மாலையில் தங்கம் விலை அதிகரித்தது நகை வாங்குவோரிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: