IMF உயர் பதவியிலிருந்து விலகினார் கீதா கோபிநாத்.. மீண்டும் இந்தியருக்கு வாய்ப்பு கிடைக்குமா..?

வாஷிங்டன்: சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலையின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநராக  கடந்த 2018ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.  மைசூரில் பிறந்த 49 வயதான கீதா கோபிநாத் ஒரு இந்திய அமெரிக்கர், இவர் 2019ல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக பணியில் சேர்வதற்கு முன்பு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ஸ்வான்ஸ்ட்ரா பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இவருடைய திறனையும் பணிகளையும் பாராட்டும் விதமாகக் கீதா கோபிநாத்-ன் விடுமுறைக் காலத்தை ஒரு வருடம் நீட்டித்தது. இதன் மூலம் தலைமை பொருளாதார வல்லுனர் பதவியில் 3 வருடம் பணியாற்ற முடிந்தது.கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்துவந்த விடுமுறை முடிவடைய உள்ளது. இதனால் அவர் நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலையின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார்.

Related Stories: