மீண்டும் கைவைக்கிறது மத்திய அரசு டிவிடெண்ட் வழங்குவது குறித்து ஆக.14ல் ரிசர்வ் வங்கி முடிவு

புதுடெல்லி: மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்குவது குறித்து, வரும் 14ம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க உள்ளது. ஏற்கெனவே நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது கூட, ரிசர்வ் வங்கி உபரி நிதியில் மத்திய அரசு கைவைத்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, ரூ.1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இதில் உபரி நிதி ரூ.52,637 கோடி அடங்கும். லாபத்தில் மத்திய அரசுக்கு பங்கு வழங்குவது தொடர்பாக முடிவு செய்ய, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் 2018ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே இடைக்கால டிவிடெண்ட் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.

எனவே, இந்த ஜூன் மாதம் வரையிலான டிவிடெண்ட் தொகையை ரிசர்வ் வங்கி வழங்கவில்லை. கடந்த ஜூன் மாதத்தின்படி, 83 சதவீதத்தை தாண்டி விட்டது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசு, அதில், ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.60,000 கோடி என கணக்கிட்டிருந்தது. இதுவரை எதுவும் வராத நிலையில், தற்போது நிதிப்பற்றாக்குறையை தீர்க்க ரிசர்வ் வங்கியிடம் டிவிடெண்டை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான், டிவிடெண்ட் வசூலிப்பது தொடர்பாக முடிவு செய்ய வரும் 14ம் தேதி ரிசர்வ் வங்கி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே இவ்வாறு டிவிடெண்ட் வழங்குவது ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என இதன் முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: