மதுரை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

சென்னை: ஏப்ரல்-18-ம் தேதி மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்.18 -ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. அதேபோல வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதே நேரத்தில் மதுரை தொகுதிக்கு மட்டும் 2 மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏனெனில் இதற்கு முன்பாகவே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்த வாக்குப்பதிவினை மாற்றி அமைக்க வேண்டும், மற்றோரு கட்டத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஏனெனில் மதுரையை பொறுத்தவரை சித்திரை திருவிழாவானது நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.18-ம் தேதி நடைபெற உள்ளது. ஆகவே அன்று ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவதால் வாக்குப்பதிவானது பாதிக்கப்படும் மேலும் வாக்காளர்கள் பாதுகாப்பில் சிக்கல் எழும் இது போன்ற கோரிக்கையின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவுக்கான நேரம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மதுரையில் காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணி வாக்குப்பதிவு வரை நடைபெறும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: