பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை..... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேலதெருவைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் வீர மரணம் அடைந்தார்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரனும் வீர மரணம் அடைந்தார். அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவசந்திரன். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: