இந்திய மொபைல் போன்களை காலி செய்யும் சீன நிறுவனங்கள்

புதுடெல்லி: சீன நிறுவனங்களின் ஆதிக்கம் காரணமாக, இந்திய மொபைல் நிறுவனங்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரும்பாலானவை ஆன்லைன் மூலமாகவே வாங்கப்படுகின்றன. சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம்  இந்தியாவில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய தொடங்கியபோதே இந்திய நிறுவனங்கள் ஆட்டம் காண துவங்கிவிட்டன. குறைந்த விலையில் நிறைய  வசதிகள் என நவீன மொபைல்களை சந்தைப்படுத்தியதால், இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கிராக்கி இல்லாமல் போய்விட்டது. இன்று சந்தையில்  விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 10 போன்களில் 6 சீன போன்கள் விற்பனை ஆகின்றன.

 இந்திய மொபைல் சந்தையில் 2015ம் ஆண்டு சீன போன்களின் பங்களிப்ப 18 சதவீதமாகவும் இந்திய போன்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும் இருந்த. 2016ல்  இவை இரண்டுமே சம அளவாக 33 சதவீதம் என இருந்தன. 2017ம் ஆண்டு சீன போன்கள் 54 சதவீதம் 2018ல் 60 சதவீதம் என சந்தை பங்களிப்பை  உயர்த்திக்கொண்டு விட்டன. ஆனால், இந்திய நிறுவனங்கள் 2017ல் 16 சதவீதம், 2018ல் 9 சதவீதம் என தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகின்றன. தற்போது ஜியோமி உட்பட விவோ, வோப்போ, ஒன்பிளஸ் உள்ளிட்ட சீன ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் மட்டுமின்றி ஷோரூம்கள் மூலமாகவும் விற்பனை  செய்து வருகின்றன.

அதோடு, மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்த சீன நிறுவனங்கள், இவற்றை இந்திய தயாரிப்பாகவே விற்பனை செய்து வருகின்றன. ஆனால், முழுக்க  முழுக்க இந்திய உற்பத்தியாகவே இருந்தும், இந்திய நிறுவனங்களின் நிலை மோசமாகிவிட்டது. இது குறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், சீன போன்கள்  குறைந்த விலைக்கு கூடுதல் வசதிகளை அளிக்கின்றன. ஆனால், இந்திய நிறுவனங்கள் மிக தாமதமாகவே இந்த தேவையை உணர்வதாக தெரிகிறது. அதற்குள்  சீன நிறுவனங்கள் சந்தை ஆக்கிரமித்து விடுகின்றன. இதுமட்டுமின்றி சீன மொபைல்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதும் ஒரு காரணம். 4ஜி  மொபைல் பரவலாகிவிட்ட நிலையில், இன்னமும் சில இந்திய மொபைல் நிறுவனங்கள் பழைய 3ஜி மொபைல்களை நிறைய உற்பத்தி செய்தும் விற்க முடியாத  அவல நிலையில் உள்ளன என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: