காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி தீவிரம்

ஓசூர்: காதலர் தினத்தை முன்னிட்டு 50 லட்சம் ரோஜா மலர்கள் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், தளி உள்ளிட்ட இடங்களில் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஓசூர் பகுதியில் பசுமை  குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. தாஜ்மஹால், நோப்ளஸ், ப்ர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகைகளில்  ரோஜாக்கள் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாக்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் போன்ற விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த ஆண்டு 50 லட்சம் ரோஜா மலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சாகுபடியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி பேசிய சாகுபடியாளர் ஒருவர், முகூர்த்த நாட்கள் காரணமாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவில் ரோஜா மலர்கள் அனுப்பப்பட்டதாகவும், உள்ளூர் சந்தையிலும் ஒரு ரோஜா மலர் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை, குறிப்பாக ஓசூரில் சொட்டு நீர் பாசனம்  மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. நல்ல மண் வளத்தால், தரமான பூக்களை உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனியின் காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ரோஜா உற்பத்தி குறைந்தாலும் அதற்கு இணையாக விவசாயிகளுக்கு மகசூல் லாபம் கிடைத்துள்ளது.      

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: