நடப்பு ஆண்டில் இதுவரை டூவீலர் ஏற்றுமதி 19.5 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 10 மாதங்களில் டூவீலர் ஏற்றுமதி 19.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. இதன்படி, நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட 10 மாதங்களில் 27,59,935  டூவீலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டும் இதில் அடங்கும். இவற்றில் மோட்டார் சைக்கிள்கள் ஏற்றுமதி 24,12,800. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 18.61 சதவீத வளர்ச்சி. ஆனால் ஸ்கூட்டர் விற்பன 26.67 சதவீதம் அதிகரித்து 3,32,197 ஆக உள்ளது. மொபெட்கள் ஏற்றுமதி 12.3 சதவீதம் அதிகரித்து 14,938 ஆக உள்ளன.  உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை மேற்கண்ட 10 மாதங்களில் உள்நாட்டு சந்தையில் 1,81,25,656  டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய நிதியாண்டில் இது 1,67,71,630. இது 8.07 சதவீத வளர்ச்சி என சியாம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: