ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை... தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை : அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் முடிவு எடுத்து இருந்த நிலையில், அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய ஓய்வு ஊதிய திட்டம், ஊதிய முரண்பாடுகள், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான  ஊதியம், தொகுப்பு ஊதிய பணியாளர்களை நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்ட  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

இதுவரை ஜாக்டோ-ஜியோ சார்பில் முன்வைக்கப்பட்ட  7 அம்ச கோரிக்கைகளுடன், தற்போது, 3500 தொடக்கப்ப பள்ளிகளை உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கை, 3500 சத்துணவு மைங்களை மூடும் அரசின் முடிவை  கைவிட வேண்டும் என்றும், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கி அதில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற இரண்டு  கோரிக்கைகளையும் இணைத்து 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்த தொடர் வேலை  நிறுத்தப் போராட்டம் நாளை திட்டமிட்டபடி தொடங்கும் என்று எதிர்ப்பத நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: