எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நாணயம் வெளியீடு

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டது. இதனை திறக்க ஐகோர்ட் நிபந்தனை விதித்ததால், விழா ஏதுமின்றி எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில், சென்னை, எம்ஜிஆர் மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சரோஜா, கருப்பண்ணன், சம்பத், மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: