உலக கோப்பை ஹாக்கிகால் இறுதியில் இங்கிலாந்து

புவனேஸ்வர்: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.

கிராஸ்ஓவர் சுற்றில் நேற்று நியூசிலாந்துடன் மோதிய இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் வில் கால்னன் 25வது நிமிடத்திலும், லூக் டெய்லர் 44வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து கடுமையாக முயற்சித்தும் ஒரு ஆறுதல் கோல் கூட அடிக்க முடியவில்லை.

இங்கிலாந்து அணி நாளை நடக்கும் முதல் கால் இறுதியில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்கிறது. பிரான்ஸ் முன்னேற்றம்: மற்றொரு கிராஸ்ஓவர் போட்டியில் சீனாவுடன் மோதிய பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. பிரான்ஸ் சார்பில் டிமோதீ கிளமென்ட் 36வது நிமிடத்தில் கோல் போட்டார். நாளை நடைபெறும் 2வது கால் இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் பிரான்ஸ் பலப்பரீட்சையில் இறங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: