கஜா புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் இருந்து மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது : இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடக்க தாமதமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 760 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகைக்கு கிழக்கே - வடக்கே 850 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கஜா புயல் வலுப்பெற்று இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது கஜா புயலானது நாகை மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கில் 840 கி.மீ. தூரத்தில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடப்பது தாமதமாக வாய்ப்பு உள்ளது. வேகம் குறைந்தாலும் நவ. 15-ல் கடலூருக்கு பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும். கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: