டிஜிட்டல் பேமன்ட் பிரச்னை தீர்க்க ஓம்பட்ஸ்மேன்

புதுடெல்லி: டிஜிட்டல் பேமன்ட் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஓம்பட்ஸ்மேன் நியமிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்களின் குறைகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண வங்கி குறைதீர்ப்பாளர் (ஓம்பட்ஸ்மேன்) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பான புகார்களும் குவிந்து வருகின்றன. இதற்கு தீர்வுகாண வங்கி ஓம்பட்ஸ்மேனை நாடுகின்றனர். இத்தகைய புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இவற்றை பரிசீலிக்க தாமதமாகிறது. எனவே, டிஜிட்டல் பேமன்ட் நிறுவனங்கள் குறித்த வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு தீர்வுகாண தனியாக நாடு முழுவதும் அலுவலகங்கள் நியமிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.  இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இவை இறுதி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: