சரக்கு, குடல்கறி, இட்லி குஷியோ... குஷி...!

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட காவேரி வீதியில் குமாரபாளையம் செல்லும் பாலத்தின் அடிவார பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. பவானி நகர பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையில் இந்த ஓட்டலில் சரக்கு விற்பனை களை கட்டி வருகிறது. 24 மணி நேரமும் சரக்கு விற்பனை ஜரூராக நடக்கிறது. இங்கு ஒரு குவாட்டர் வாங்கினால், ஒரு பிளேட் குடல்கறியும், 4 இட்லியும் இலவசம். இதன் மதிப்பு 140 ரூபாய். இதனால் இந்த ஓட்டலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு சட்ட விரோதமாக மது விற்பது குறித்து போலீசாருக்கு தெரிந்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு காரணம் இந்த ஓட்டலை நடத்தி வருபவர் ஆளும்கட்சியை சேர்ந்தவர். உள்ளூர் அமைச்சர் ஒருவர்தான் இந்த ஓட்டலை திறந்து வைத்துள்ளார். இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன், கேட்டபோதெல்லாம் சரக்கு, குடல்கறி, இட்லி கிடைப்பதால் போலீசார் குஷியோ, குஷி. பல நேரங்களில், ‘குடி’’ மகன்களின் கூட்டம் அதிகரிக்கும்போது போலி சரக்கும் உள்ளே புகுந்து விடுகிறது. போதை ஏறிய பிறகு போலியாவது, ஒரிஜினலாவது... ஒன்னுமே தெரியாது... போடா.. ப்போ... என போலீசார் டயலாக் அடிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: