புரட்டாசியால் கத்தரிக்காய் விலை திடீர் உயர்வு

வேலூர்: வேலூர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் கத்தரிக்காய் 1 கிலோ 16 அதிகரித்து 46க்கு விற்பனையானது.  வேலூர் மார்க்கெட்டில் கத்தரிக்காய் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென 16 அதிகரித்து 1 கிலோ 46க்கு விற்பனையானது.  இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் கத்தரிக்காய் வரத்து பெருமளவு குறைந்துவிட்டது. அதேவேளையில் புரட்டாசி மாதம் தொடங்கி (நாளை) இன்று முதல் சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான மக்கள் கத்தரிக்காயை அதிகம் வாங்கிச்செல்ல வந்திருந்தனர். இதனால் கத்தரிக்காய் தேவை அதிகரித்தது அதேசமயம் வரத்து 70 சதவீதம் குறைந்திருந்தது. வரத்து குறைவால் கத்தரிக்காய் விலை 16 அதிகரித்து 1 கிலோ 46க்கு விற்பனை செய்யப்பட்டது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: