நிவின் பாலி ஜோடியாக அதிதி பாலன்

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் ஹீரோயினாக  நடித்த அதிதி பாலன், அதற்கு பிறகு தன்னை தேடி வந்த வாய்ப்புகளை, கதை  சரியில்லை மற்றும் அந்த கதையில் தனது கேரக்டர் சரியில்லை என்று சொல்லி,  எந்த படத்திலும் நடிக்காமல் காலம் கடத்தினார்.

இந்நிலையில், மலையாளத்தில்  நிவின் பாலி ஜோடியாக நடிக்க வந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், சரளமாக  பேசுவதற்காக மலையாளம் கற்று வருகிறார். லிஜு கிருஷ்ணா இயக்கும்  இப்படத்துக்கு படவெட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுப்பட வாய்ப்பு பெறுவதற்காக, மற்ற நடிகைகளை போல் கிளாமர் போட்டோசெஷன் நடத்தி, அந்த போட்டோக்களை இயக்குனர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்கிறாராம் அதிதி.

Related Stories: