கவர்ச்சி வலை வீசும் மச்சான் நடிகை

ஹலோ மச்சான்ஸ் என்று தனது ரசிகர்களை செல்லமாக அழைத்து தனது கவர்ச்சி அலையில் அவர்களை திக்குமுக்காட வைத்ததுடன் விஜயகாந்த், சரத்குமார். சத்யராஜ், பிரபுதேவா, ஸ்ரீகாந்த் படங்களில் நடித்து எங்கு திரும்பினாலும் தனது பெயரை உச்சரிக்க வைத்தவர் நமீதா. ஒல்லியாக, கவர்ச்சி தூக்கலாக கும்மென்று இருந்த நமீதா ஒரு கட்டத்தில் மதமதவென வெயிட்போட்டு குண்டானார். அவரது பீட்சா சாப்பிடும் மோகம்தான் வெயிட் அதிகரிக்க காரணமாக இருந்தது.

என்னென்னவோ பயிற்சிகள் செய்தும் பழைய ஒல்லிபிச்சான் தோற்றத்துக்கு வர முடியவில்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்து ஒரு கட்டத்தில் கைவசம் படங்கள் இல்லாத நிலை உருவானது. இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலன் வீரேந்திர சவுத்ரியை கல்யாணம் செய்து கொண்டார் நமீதா. அத்தோடு இல்லறத்தில் செட்டிலாகிவிடுவார் என்று பலரும் எண்ணிய நேரத்தில் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

வாயை கட்டி, வயிற்றை கட்டி, கடுமையான உடற்பயிற்சிகள் செய்து மீண்டும் கவர்ச்சி தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள் ளவர் இது நமீதாதானா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு வெயிட் குறைத்திருக்கிறார். கடந்த ஆண்டு பொட்டு படத்தில் நடித்த நமீதா அடுத்து மியா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது வீசியிருக்கும் கவர்ச்சி வலையில் புதியபட வாய்ப்புகள் சிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories: