விலங்குகள் நலவாரியத்தில் லஞ்சம்; தயாரிப்பாளர் பகீர் தகவல்

ஜெமினி சினிமாஸ் ஜெமினி ராகவா, ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம், ஆண்கள் ஜாக்கிரதை. கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ‘இப்போது  நடிகர்களை வைத்து படம் தயாரிப்பது மிகவும் கஷ்டம்.

ஷூட்டிங்கில் இடையே நாய் தவறுதலாக ஓடினால் கூட சென்சாரில் பிரச்னை ஏற்படுகிறது. அனிமல் கிளியரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நலவாரியத்துக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. போன மாதம் கூட ஒரு படத்துக்கு மூன்று லட்ச ரூபாய்  வாங்கினார்கள். விலங்குகள் நலச் சான்றிதழ் பிரச்னையை சரி செய்வது என்பது, படம் தயாரிப்பதை விட கஷ்டமாக இருக்கிறது’ என்றார்.

Related Stories: