‘நாட் மை தீபிகா’ ஹேஷ் டேக் பரபரப்பு

நேசமணி ஹேஷ்டேக், நான்தான் ரஜினிகாந்த் ஹேஷ்டேக் போன்ற ஒரு சில ஹேஷ் டேக்குகள் ஃபேஸ்புக்கில் திடீர் டிரெண்டாகி உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிடுகிறது. அதுபோல் நாட் மை தீபிகா என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. இது உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்குமா என்பது தெரியாது. ஆனால் தீபிகாபடுகோனேவின் ரசிகர்கள் மனதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது என்பது நிச்சயம்.

கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடித்த தீபிகா படுகோன் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவரது ஃபேஸ்புக், டுவிட்டரை டேக் செய்து நாட் மை தீபிகா என ஏராளமான ரசிகர்கள் ஹேஷ்டேக் பதிவிட்டு வருகின்றனர். அவர் மீது ரசிகர்களுக்கு அப்படியென்ன வருத்தம்... மும்பையில் பாலிவுட் இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி வாசலில் தீபிகா படுகோனே, ரன்வீர் கபூர் சமீபத்தில் தென்பட்டனர்.

அந்த படம் நெட்டில் வெளியானது. அதைப்பார்த்தவுடன் தீபிகா ரசிகர்கள் பரபரப்பானார்கள்.  உடனே நாட் மை தீபிகா ஹேஷ் டேக் உருவாக்கி லுவ் ராஜன் படத்தில் தீபிகா படுகோனே நடிக்கக்கூடாது என்று சரமாரியாக நெட்டில் தெறிக்கவிட்டனர். லுவ் ராஜன் பெண்களை பாலியல் ரீதியாக தொல்லை செய்தவர் என அவர் மீது மீடூ புகார்கள் உள்ளன. மீடூ இயக்கத்துக்கு ஆதரவானவர் தீபிகா படுகோன்.

பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும்போது அதை எதிர்த்து குரல் கொடுப்பவர். அப்படிப்பட்ட தீபிகா ஏற்கனவே மீடூ புகாரில் சிக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ‘#நாட்மைதீபிகா’ என ஹேஷ் டேக் பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தீபிகா படுகோன், இயக்குனர் லுவ் படத்தில் நடிக்காமல் விலகுவாரா? அல்லது ரசிகர்கள் எதிர்ப்பை மீறி நடிப்பாரா என்பதுபற்றி இதுவரை தீபிகா தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை.

Related Stories: