லக்னம் ராசி கிரக சேர்க்கை யோகங்கள்

ஜோதிடமுரசு மிதுனம் செல்வம்

விவசாயிகளுக்கு அடுத்தபடியாக விளையும் பொருட்களை வாங்கும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வியாபாரிகள், தொழில் அதிபர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வியாபாரம் என்றால் சுயமாக செய்வது சில பங்குதாரர்களை சேர்த்து கூட்டாக செய்வது. என பலவகைகள் உள்ளது. முதலீடு செய்யும் பங்குதாரர்கள், ஒர்க்கிங்பார்ட்னர் அதாவது உடல் உழைப்பை தரும் கூட்டாளிகள், மேனேஜிங் பார்ட்னர். அதாவது எல்லா வகைகளிலும் தொழில், வியாபாரத்தை நடத்தி செல்பவர் என பலர் இருக்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் சுய தொழிலோ கூட்டுத் தொழிலோ எதுவாக இருந்தாலும் ஜாதக கட்டத்தில் முதலில் லக்னம், தனஸ்தானம், ஆறாம் இடம் ஏழாம் இடம், பத்தாம் இடம், பதினொன்றாம் இடம் மற்றும் அந்த இடத்தின் அதிபதிகள் பலமாக இருப்பது மிகமிக அவசியம்.

மேஷ லக்னம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பத்தாம் அதிபதி சனி, இரண்டு, ஏழுக்குடைய சுக்கிரன் மற்றும் சூரியன், குரு ஆகிய கிரகங்களின் பார்வை, சேர்க்கை இருந்தால் கூட்டுத் தொழிலில் வெற்றியடைவார்கள்.

ரிஷப லக்னம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒன்பது, பத்துக்குடைய தர்மகர்மாதிபதியாக சனி அமைவது சிறப்பு. மேலும் சுக்கிரன், புதன், செவ்வாய் மூவரும் ஆகிய கிரகங்களின் பார்வை, பரிவர்த்தனை அமைந்தால் தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள்.

மிதுன லக்னம்: மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழு, பத்துக் குடையவராக குரு பகவான் இருக்கிறார். மேலும் சந்திரன், புதன், சுக்கிரன் மூவரும் ஆகிய கிரகங்களின் பலம், அருள் பார்வை அமைந்தால் மிகப் பெரிய வர்த்தகர்களாக பிரகாசிப்பார்கள்.

கடக லக்னம்: கடக ராசிக்காரர்களுக்கு ஐந்து, பத்துக்குடையவராக, ஒரு கோணத்திற்கும், கேந்திரத்திற்கும் ஆதிக்கம் செலுத்தும் செவ்வாய் இருக்கிறார். மற்றும் சூரியன், சந்திரன், குரு மூவரும் ஆகிய கிரகங்களின் பலம், பார்வை ஏற்பட்டால் தொழிலில் பல சாதனைகள் செய்யும் யோகம் உண்டாகும்.

சிம்ம லக்னம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்தாம் அதிபதியாக சுக்கிரன் பலமாக இருந்து புதன், குரு, சனி மூவரும் ஆகிய கிரகங்களின் யோக அம்சங்கள் சேரும் போது வியாபாரம், கூட்டுத் தொழில் லாபகரமாக அமையும்.

கன்னி லக்னம்: கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் மிகப் பெரிய யோகத்தை தருவார். வியாபார கிரகமான புதன் லக்னாதிபதியாக அமைவதால் தொட்டது துலங்கும். சுக்கிரனும், குருவும் நல்ல ஸ்தான பலத்தில் இருந்தால் கூட்டுத் தொழில், விவசாயம், ஏற்றுமதி இறக்குமதி, பல் தொழில் வித்தகர்களாக திகழ்வார்கள்.

துலாம் லக்னம்: துலா ராசிக்காரர்களுக்கு இரண்டு, ஏழுக்குடை செவ்வாய் பலமாக அமைந்தால் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். சந்திரன் ஆட்சி, உச்சம், கேந்திரம் என பலமாக அமைந்தால் இவர்களின் கணக்குகள், திட்டங்கள் எல்லாம் வெற்றியடையும். சனியும்,புதனும் சாதகமாக இருந்தால் உயர் உச்ச தொழில் அதிபர்களாக வலம் வருவார்கள்.

விருச்சிக லக்னம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன காரகன் குருவின் தன பஞ்சம ஸ்தானாதி பதியாக வருவதால் குருவின் பார்வை பலம் தொழில் யோகத்தை தரும். சுக்கிரன் அருள் காரணமாக கூட்டுத் தொழில் கை கொடுக்கும். தொழில் காரகன் சூரியன், மற்றும் சந்திரன் பலமாக இருந்தால் பெரிய வியாபாரிகளாகவும், நூற்றுக் கணக்கானவர்களுக்கு வேலை தரும் முதலாளிகளாக இருப்பார்கள்.

தனுசு லக்னம்: தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழு, பத்துக்குடைய புதன் பலமாக அமைந்தால் கூட்டுத் தொழில் பெரிய முன்னேற்றத்தை தரும். சனி, செவ்வாய் சேர்க்கை, பார்வை பலம் இருந்தால் பல தொழில்களில் ஈடுபட்டு பொருள், புகழ் சேரும் யோகம் உண்டு.

மகர லக்னம்: மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் யோக காரகனாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் வருவதால் தொழில் விருத்தி உண்டு. சனி, சந்திரன் நல்ல அம்சத்தில் இருந்தால் சுயதொழில், கூட்டுத் தொழில், ஏஜென்சி வியாபாரங்கள் மூலம் நல்ல பணம் பொருளிட்டலாம்.

கும்ப லக்னம்: கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ஆட்சி, உச்சம், திரிகோணம் போன்ற அமைப்புக்களில் இருந்து குருவின் பார்வையும், சூரியனின் அருளும் இருந்தால் கூட்டுத் தொழில், கான்ட்ராக்ட், ஏஜென்சி, கட்டிட தொழில்களில் நல்ல உயர் உச்ச நிலையை தொடலாம்.

மீன லக்னம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பலம் நல்லபடியாக அமைந்தால் தொழிலதிபர்களாக பிரகாசிப்பார்கள். செவ்வாய், புதன் இருவரின் பலம் ஜாதகத்தில் உடன் சேரும் போது பல தொழில்கள் செய்யும் யோகம் உண்டாகும். கட்டிட கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், சூப்பர் மார்க்கெட், தங்கம், நவரத்தின வெள்ளி வகை வியாபாரத்தில் பெரிய டீலராக இருப்பார்கள். புதன் பலம் அதிகமாக இருந்தால் கூட்டுத் தொழில், பங்கு வர்த்தகம் கை கொடுக்கும்.

Related Stories: