டிரிபெகா திரைப்பட விழாவில் ஆதிபுருஷ்: பிரபாஸ் நெகிழ்ச்சி

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஜூன் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும் 22வது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்படுகிறது. ‘ஆதி புருஷ்’ திரைப்படம் ஜூன் 16ம் தேதி முதல் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது. அண்மையில் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவிற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தினை உலகளாவிய பிரத்யேக காட்சியாக திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. 2001ம் ஆண்டில் ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகர்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேக் ஹாட்காஃப் ஆகியோரால் ஓகேஎக்ஸ் என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் சார்பாக நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான படங்கள் திரையிடப்படுகின்றன.
பிரபாஸ் கூறும்போது, ‘ஆதி புருஷ் சர்வதேச அளவிலான அரங்குகளை சென்றடைந்ததை, ஒரு நடிகனாக மட்டுமின்றி, ஒரு இந்தியனாகவும் என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது. டிரிபெகாவில் பார்வையாளர்களின் வரவேற்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

The post டிரிபெகா திரைப்பட விழாவில் ஆதிபுருஷ்: பிரபாஸ் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: