வேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது

சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி. தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், கோபண்ணா, செல்லகுமார், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், ஆலந்தூர் நாஞ்சில் பிரசாத், சிவ.ராஜசேகரன், ஜி.டில்லி பாபு, அடையாறு துரை, ஏ.ஜி.சிதம்பரம், ஆர்.எஸ்.செந்தில் குமார், திருவேற்காடு லயன் டி.ரமேஷ், சுந்தரமூர்த்தி  நாகராஜன் முன்னிலை வகித்தனர்.  மாநில செயல் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் எம்பி பேசினார். பின்னர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட புறப்பட்ட காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, கிண்டி மடுவன்கரையில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கவைத்தனர். இதில் மாநில நிர்வாகிகள் உ.பலராமன், தாமோதரன், கீரனூர் ராஜேந்திரன், இல.பாஸ்கர், கணபதி, ஆவடி கோதண்டன், வாசு, ரங்கபாஷ்யம், சிரஞ்சீவி,காண்டீபன், கதிர்வேடு பர்னபாஸ், துரை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட காங்கிரசார் மாலையில் விடுவிக்கப்பட்டனர்….

The post வேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: